Published Date: September 5, 2024
CATEGORY: CONSTITUENCY
மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு.
மதுரை மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
இதற்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக வணிகவரி பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வளர்ச்சி திட்ட பணிகளின் செயலாக்க நிலையை குறித்து ஆய்வு செய்தனர். மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் முல்லை பெரியாறு குடிநீர் திட்ட பணிகள், புதை சாக்கடை திட்டப்பணிகள், பாலங்கள் அமைக்கும் பணிகள், சாலை பணிகள், வடகிழக்கு பருவமழையொட்டி மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர்.
மாவட்ட ஆட்சியர் மா.செள.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் ச. தினேஷ்குமார், கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் ர.சக்திவேல், மாநகராட்சி துணை மேயர் தி. நாகராஜன், மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Media: Dinamani